என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாளை நூற்றாண்டு மண்டபத்தில் கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி
  X

  கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.


  பாளை நூற்றாண்டு மண்டபத்தில் கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாளை சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை சார்பில் கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி நடந்தது
  • விக்டர் கிறிஸ்துமஸ் பாடல்களை தொகுத்து வழங்கினார்.

  நெல்லை:

  பாளை சி.எஸ்.ஐ. ஜெய ராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை மற்றும் சி.எஸ்.ஐ. பெல்பின்ஸ் இந்தி ராணி செல்லத்துரை மிஷன் மருத்துவமனை சார்பில் கிறிஸ்துமஸ் மிஷன் கேரல்ஸ் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. இதில் சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் பர்னபாஸ், திருமண்டல லே செயலர் டாக்டர் டி.எஸ். ஜெயசிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

  பேராயர் பர்னபாஸ் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. பெல் பின்ஸ் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயம் ஜூலியட் வரவேற்றார். விக்டர் கிறிஸ்துமஸ் பாடல்களை தொகுத்து வழங்கினார். விழாவில் திருமண்டல பொருளாளர் மனோகர், பாளை பெல்பின்ஸ் உரிமையாளர் குணசிங் செல்லத்துரை, திருமண்டல மருத்துவ காரியதரிசி செல்வராஜ், ஜேக்கப், கரிசல் டேவிட் சாலமோன், ஜெயகர், ஜேசு ஜெகன், நெல்சன், நொபுளி, திருமண்டல கண்காணிப்பாளர் கருணா கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பால் ராபின்சன் நன்றி கூறி னார். ஏற்பாடுகளை மருத்துவ மனைகளின் மேலாளர்கள் மெல்டன், ஜோசப் ஆகியோர் செய்திருந்தனர்.

  Next Story
  ×