என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
- சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தக டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.
இதில் கோவில் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில், விருதகிரி காசாளர் கலியராஜ், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது 4 மாட வீதிகளையும் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.






