search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ஷிபா மருத்துவமனையில் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்
    X

    கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்.


    நெல்லை ஷிபா மருத்துவமனையில் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்

    • முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
    • இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கிளினிக் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    நெல்லை:

    சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன் நெல்லை ஷிபா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்து கூறியதாவது:-

    கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்குமான ஆலோசனைகளை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை ஷிபா மருத்துவமனையில் காலை 10 மணி முதல் 12 மணி வரை என்னை நேரில் சந்தித்து பெற்றுக்கொள்ளலாம்.

    முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். ஷிபா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கிளினிக் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது இப்பொழுது நவீன மருத்துவத்தில் எளிதாக செய்யப்படுகிறது. முற்றிய மஞ்சள் காமாலை உள்ளவர்கள், மருத்துவர்களால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் எனது வருகையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஷிபாமருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் உடனிருந்தார்.

    Next Story
    ×