என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வீரபத்திரசாமி கோவிலில் தேர் திருவிழா
    X

    கோடாரம்பட்டி ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் கிராம மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்தனர்.

    வீரபத்திரசாமி கோவிலில் தேர் திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்னிகுண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் வீரபத்திரசாமியை வழிபட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கோடாரம்பட்டி ஸ்ரீ வீரபத்திரசாமி கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அக்னிகுண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது.

    மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோடாரம்பட்டி ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

    நேற்று முன்தினம் இரவு முதலாம் பூஜை, இரண்டாம் பூஜை மற்றும் மூன்றாம் பூஜைகள் நடைபெற்று நேற்று காலை அக்னி குண்டம் இறங்குதல் நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி ஸ்ரீ வீரபத்திரசாமியை வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் பெரிய தேர் பவானி வந்தது.இதில் 10 ஊர் கிராம மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்தனர், மஹா சிவராத்திரியை முன்னிட்டு 2 நாட்களாக தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×