என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசித்தி பெற்ற குற்றாலம் திருக்குற்றால நாதர் கோவிலில் தேர் திருவிழா
    X

    திருக்குற்றால நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.

    பிரசித்தி பெற்ற குற்றாலம் திருக்குற்றால நாதர் கோவிலில் தேர் திருவிழா

    • தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம்.
    • பொதுவாக, இந்தப் பகுதிகளில் உள்ள அருவிகளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தந்த வண்ணம் உள்ள சூழலில், இந்த இயற்கை அழகு பொருந்திய குற்றாலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க திருக்குற்றாலநாத சுவாமி கோயில்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம்.

    பொதுவாக, இந்தப் பகுதிகளில் உள்ள அருவிகளில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகை தந்த வண்ணம் உள்ள சூழலில், இந்த இயற்கை அழகு பொருந்திய குற்றாலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க திருக்குற்றாலநாத சுவாமி கோயில்.

    இந்தக் கோவில்களில் ஆண்டு தோறும் திருவாதிரைத் திருவிழா, விசு திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதும், நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள இந்த குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மார்கழி மாதம் கொண்டாடப்படும் திருவாதிரைத் திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறும்.

    அப்படிபட்ட இந்த திருவாதிரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில், கடந்த 28-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவாதிரைத் திருவிழாவானது வருகிற 6-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், 5-வது திருநாளான இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சிவபூதகனம் வாத்தியங்கள் முழங்க, முதலில் விநாயகர் தேரும், 2 -வதாக முருகன் எழுந்தருளிய தேரும், 3-வதாக நடராசர் எழுந்தருளிய தேரும், 4-வதாக குற்றாலநாதர் எழுந்தருளிய தேரும், 5-வதாக குழல்வாய்மொழி அம்மன் தேரும் ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து, வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருநாள் அன்று காலை 9-மணிக்கு சித்திரை சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 6-ம் தேதி 10-ம் திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து, அதே தினத்தில் காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×