search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாத்தூர் அய்யனார் கோவிலில் தேர் திருவிழா
    X

    மாத்தூர் அய்யனார் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

    மாத்தூர் அய்யனார் கோவிலில் தேர் திருவிழா

    • கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா நடந்தது.
    • 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அருகே மாத்தூரில் அய்யனார், வடிவுள்ள அம்மன், வடுகநாதர், மதுரை வீரன் கோவிலில் வடிவுள்ள அம்மனுக்கு பால்குடம், காவடி, தேர்வலம் வருதலை முன்னிட்டு அய்யனாருக்கு கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி கடந்த 11-ந் தேதி இரவு எல்லை பிடாரிக்கு காப்பு கட்டுதல், அடுத்தநாள் வடிவுடைய அம்மனுக்கு காப்பு கட்டுதல், 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம், 25-ந்தேதி காலை பால்குடம், காவடி, கரகம், தொட்டி வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து, 26-ந் தேதி வடிவுடையம்மன், வடுகநாதர், மதுரை வீரன் ஆகிய 3 தேரை சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியனும் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். சுண்டக்குடி சுவாமிநாதன் மற்றும் மதியழகன் குழுவினரின் சரித்திர நாடக நிகழ்ச்சியும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் மற்றும் மாத்தூர் மேற்கு கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×