என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.
கர்நாடகம் தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இரா.முத்தரசன்
- தண்ணீர் வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன.
- சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டதும் விவசாயிகள் உற்சாகத்துடன் வழக்கமான அளவை விட அதிக அளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். செப்டம்பர் 30-க்குள் சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைய வேண்டும்.
ஆனால், தமிழகத்திற்கு, கர்நாடகம் வழக்கமாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






