search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 19ம் தேதி முதல் கணக்கெடுப்பு
    X

    ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 19ம் தேதி முதல் கணக்கெடுப்பு

    • மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • 3 நிலைகளில் குழுக்கள் அமைத்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிச் செல்லாக் குழந்தை களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்து மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளி யில் சேர்ப்பது தொடர்பாக வருகிற 19ம் தேதிமுதல் 11.01.2023 வரை ஆசிரியர், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் குடியிருப்பு வாரியாக பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியினை மேற்கொள்ள வும், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தை தொழிலாளராக மாறிய குழந்தைகளை மீட்டெடுத்து அவர்கள் பள்ளிகள் செல்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் பல்வேறு துறை யின் களப்பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்திட வும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தங்கள் பஞ்சாயத்து க்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் இல்லை என்ற நிலையை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றிடவும், பள்ளி செல்லா குழந்தை களை கண்டறிவதற்கான பள்ளி அளவில், வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் என 3 நிலைகளில் குழுக்கள் அமைத்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×