என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்; 2 பேர் படுகாயம்
- நாங்குநேரியை சேர்ந்த சிவசக்தி, ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்
- பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசக்தி (வயது51). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஆறுமுகத்துடன் வள்ளியூருக்கு வந்தார்.
பின்னர் இருவரும் ஆறுமுகத்திற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். சிவசக்தி பின்னால் அமர்ந்திருந்தார்.
நெல்லை-நாகர்கோவில் நான்குவழிச் சாலையில் வாகைகுளத்தில் இருந்து பட்டர்புரம் செல்ல சர்வீஸ் சாலையில் திரும்பிய போது, பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசக்தி, ஆறுமுகம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






