என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆத்தூரில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
ஆத்தூரில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
- இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
- இதில், 500-க்கும் மேற்பட்ட பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. ஆத்தூர் சாரதா ரவுண்டானாவில் தொடங்கி காமராஜர் சாலை, ரங்கசாமி தெரு, கடைவீதி, ராணிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக பேரணி நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் ஊர்வலமாக சென்றும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய மருத்துவ சங்க செயலாளர் கிருபா சங்கர், டாக்டர்கள் ஃபீலோ செல்விக்குமுதம், அருண் குமார், சுரேஷ் சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story