search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? -ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. காட்டம்
    X

    அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

    தி.மு.க.வால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? -ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. காட்டம்

    • டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
    • தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், மா.கோவிந்தராசு, ராமசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், அம்மா பேரவை இணை செயலாளரும் பால்வளத் தலைவருமான காந்தி , எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் பகுதி செயலாளரும் கூட்டுறவு அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி, திராவிட கூட்டுறவு வங்கி தலைவர் கரந்தை பஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பகுதி செயலாளரும் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. இந்த காலத்தில் அவர்கள் ஒரு சாதனை கூட செய்யவில்லை. 15 மாதத்தில் என்ன செய்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? .ஆட்சிக்கு வந்தால் இல்லதரசிகளுக்கு மாதம் ரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துேவாம் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இவைகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க.வுக்கு துணை போய் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் சாவித்ரி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதி பூபதி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி வாஞ்சிநாதன், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி கோட்டை பகுதி மோகன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், கிளை செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி , கேசவன், காந்திமதி, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, மாணவரணி முருகேசன், மாவட்ட பொருளாளர் தம்பிதுரை , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மலைஅய்யன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைசெந்தில், மாவட்ட துணை செயலாளர் தவமணி மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×