என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு
    X

    வளாகத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்.

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டது.
    • வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் பெட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், சிவில் என்ஜினியரிங் மாணவர்களுக்கு கல்லூரியில் வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. தூத்துக்குடி ஸ்பிக் லிமிடெட் கலந்து கொண்டு தேர்வை நடத்தியது. வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி ஸ்பிக் லிமிடெட் பொதுமேலாளர் செந்தில்நாயகம், துணை பொதுமேலாளர் சண்முகம் ஆகியோர் மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். வளாகத் தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×