search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே சேற்றில் சிக்கிய எருமை மாடு
    X

    பரமத்திவேலூர் அருகே சேற்றில் சிக்கிய எருமை மாடு

    • தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார்.
    • அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    இதைபார்த்த கண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் மாட்டை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து கண்ணன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, சேற்றில் சிக்கிக்கொண்ட எருமை மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×