என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலி
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலி

    • முல்லைப்பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
    • சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை பிணமாக மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அரண்மனைபுதூர் முல்லை நகரை சேர்ந்தவர் பிரேம் குமார் மகன் மணிமாறன் (வயது16). சம்பவத்தன்று விளையாட செல்வதாக தனது நணர்களுடன் வெளியே சென்றார்.

    தனது வீட்டு அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை பிணமாக மீட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×