search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே  நீர்த்தேக்க தொட்டி பணிக்கு பூமி பூஜை
    X

    பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்ற காட்சி.

    வாசுதேவநல்லூர் அருகே நீர்த்தேக்க தொட்டி பணிக்கு பூமி பூஜை

    • ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பூமி பூஜை விழாவுக்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெல்கட்டும் செவல் ஊராட்சியில், மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு பூமி பூஜை செய்து பணி ஆரம்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வாசுதே வநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திர மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மகேந்திரன், முனியராஜ், கிளைச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்ப சாமி, ஓவர்சீஸ் முத்துமாரி, அரசு ஒப்பந்த தாரர்கள் கார்த்தி, மாரித்துரை, பூசைத்துரை, உள்ளார் மணி கண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×