search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இன்று புத்தக திருவிழா தொடக்கம்
    X

    ஈரோட்டில் இன்று புத்தக திருவிழா தொடக்கம்

    விழாவை சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    சூரம்பட்டி:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திரு விழா உள்ள நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக திருவிழா 18 வது ஆண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை )முதல் வருகிற 16 -ந் தேதி வரை இந்த புத்தக திரு விழா நடக்கிறது .

    இதன் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .அமைச்சர் முத்துசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே .எம் மயிலானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் . மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசுகிறார்.

    இந்த விழாவை சென்னை யில் இருந்து முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ .ஆகியோர் வாழ்த்து பேசுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

    Next Story
    ×