என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே ஏரியில் வாலிபர் சடலம்
- இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.
- சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
அவரது தலையில் தொழிற்சாலையில் பணியின் போது பாதுகாப்புக்கு அணியும் ஹெல்மெட் இருந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவர் வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை யாரேனும் அடித்து கொலை செய்து வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






