search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்கடம் பெரியகுளத்தில் ஒரு மாதத்தில் படகு சவாரி தொடக்கம்
    X

    உக்கடம் பெரியகுளத்தில் ஒரு மாதத்தில் படகு சவாரி தொடக்கம்

    • பெரியகுளத்தில் 4 இருக்கைகள் கொண்ட 2 படகுகள், 2 இருக்கைகள் கொண்ட 1 படகு, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகுடன் கூடிய படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
    • குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல் வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி புரைமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாதகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது.

    இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள். விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல் வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீடடிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

    செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது அனைத்து குளங்களிலும் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் நிரந்தரமாக பட சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி விரைவில் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பெரியகுளத்தில் 4 இருக்கைகள் கொண்ட 2 படகுகன், 2 இருக்கைகள் கொண்ட 1 படகு, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகு ஆகியவற்றுடன் படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும். இதில் மோட்டார் படகு தற்போது தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×