search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க அரசை கண்டித்து கோவையில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம்
    X

    தி.மு.க அரசை கண்டித்து கோவையில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம்

    • தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.
    • பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநிலம் முழுவதும் நடக்கும் இந்த போராட்டமானது மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. சில முறைகேடுகள் தொடர் பான பட்டியலையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளி யிட்டார்.

    இதையடுத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத் தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    கோவை சிவானந்தா காலனியில் கோவை மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சி.பி. ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநிலம் முழுவதும் நடக்கும் இந்த போராட்டமானது மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. ேவலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவே அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ராணுவத்திற்கு ஆட்களை எடுக்கவே மாட்டோம் என சொல்லவில்லை. படித்து முடித்து விட்டு எதிர்காலத்தை பற்றி கவலையுடன் இருக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கவும், தேச பக்தியை வளர்க்கவும் அக்னிபத் திட்டம் பயன்படும்.

    பிரதமர் மோடி எந்த ஒரு முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை ஏளனப்படுத்துவது, களங்குபடுத்துவது போன்ற செயல்களிலேயே தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தாமரை பாரத தேசம் எங்கும் வளர்ந்து வருகின்றது. விரைவில் தமிழகத்திலும் தாமரை மலரும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மனசாட்சியின்படி பதவியேற்றவர்கள் மனசாட்சி இல்லாமல் செயல்படுவதை கண்டித்து தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது. தி.மு.க தேர்தலின் போது கூறிய தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை இரு முறை மத்திய அரசு குறைத்து இருக்கின்றது. பா.ஜனதா ஆளும் மாநில அரசுகளும் வரியை குறைத்துள்ளன. ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை பற்றி பேசிய தி.முக மட்டும் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகின்றது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, லாக்கப் மரணங்கள் அதிகரித்துள்ளது. குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றபட வில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் போன்ற திட்டங்களை இந்த அரசு நிறுத்தி விட்டது. கோவையில் சாலைகள் அனைத்தும் மோசமாக இருக்கின்றது. முழுமையாக சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகப்படுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார். பா.ஜனதா உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×