search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது-  சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
    X

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ மற்றும் பலர் உள்ளனர்.

    தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது- சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

    • சங்கரன்கோவிலில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகர தி.மு.க. சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் முப்புடாதி அம்மன் கோவில் அருகே நடந்தது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மகளிர் அணி செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜதுரை, மனோகரன், புனிதா, முன்னாள் நகர செயலாளர் சங்கரன், இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர அவை தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், நகர இளைஞரணி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

    இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    தற்போது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர்

    மு. க. ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு என்பதில் உறுதி யாக உள்ளார்.

    பா.ஜ.க. தலை கீழாக நின்றாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. உயர் ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது படித்தவர்களுக்கு தெரியும் இதில் பயன்பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும்தான் என்று.

    இன்று இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்து பார்க்கும் வகையில் கட்சியையும் ஆட்சியும் நடத்திய நமது முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் என்பதை இந்த தருணத்திலே நான் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன்.

    தென்காசி வடக்கு மாவட்டத்தை பொருத்த வரை ஒரு ஆற்றல் மிகுந்த செயலாளரை நமது கழகம் பெற்றிருக்கிறது. இளமையிலேயே மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. என்பது தி.மு.க.விற்கு கிடைத்த அளப்பரிய சொத்து.இனிவரும் காலங்களில் சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. கோட்டையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, முத்தையாபாண்டியன், பூசை பாண்டியன் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் மாரி முத்து, செண்பகவிநாயகம், பாலசுப்ரமணியம், குருசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, சிவகிரி கோமதி, ராயகிரி இந்திரா, பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, வேல்சாமி பாண்டியன், சாகுல் ஹமீது, மாரிசாமி, தேவதாஸ், மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, மூத்த வழக்கறிஞர் சண்முகையா, அரசு வக்கீல்கள் கண்ணன், அன்புசெல்வன், ஜெயக்குமார் சார்பு அணி அமைப்பாளர்கள் சோமசெல்வபாண்டியன், யோசேப்பு, பத்மநாதன், இளைஞர்அணி சரவணன், மாணவரணி உதயகுமார், கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், குமார், அஜய் மகேஷ்குமார்,

    தொண்டரணி முத்துமணிகண்டன் சங்கர், ஆதி மற்றும் வீரமணி, வீரா, சபரிநாத், ஜெயகுமார், பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாழைக்காய் துரைபாண்டியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×