search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி
    X

    பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா தேர் பவனி நடந்தது.

    பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி

    • மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.
    • தேர்பவனியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்..பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் விழா நாட்களில் மாலை பூண்டி மாதாவின் சிறிய சுரூபம் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய‌ சப்பரத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து வந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    மாதாவின் பிறப்பு பெருவிழா நாளான நேற்று மாலை பேராலயத்தின் எதிரில் இருந்த கலையரங்கத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற‌ பொருளில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி, மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், பேராலய‌அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், லால்குடி மறைவட்டமுதன்மை குரு பீட்டர் ஆரோக்கியதாஸ், பேராலய‌உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு ஆலயங்களில் இருந்து வந்திருந்த அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்ததும் பூண்டி பேராலய‌ முகப்பில் சிறப்பு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.

    அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட தும் தேர்ப வனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது ஆலயமணிகள் முழங்கின. வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேர்பவ னியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.

    பேராலய‌ வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    தேர் பவனி‌ நிறைவ டைந்ததும்‌ இன்று (வெள்ளி) மரியாள் தாய்மை யின் தலைப்பேறு‌ என்ற‌ பொருளில்‌ பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு பூண்டி பேராலயத்தில் மாதா ‌பெருவிழா நிறைவு பெற்றது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், ஆன்மீக தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    தேர்பவனியின் போது திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×