என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    பராசக்தி மாரியம்மன் குங்குமக் காப்பு அலங்காரத்தில். அருள்பாலித்தார்.

    ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
    • சுமங்கலி பெண்கள், குழந்தைகள், கன்னிப்பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. திருவையாறு மேலவீதியில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் குங்குமக் காப்பில் அருள்பாலித்தார். சுமங்கலி பெண்கள், குழந்தைகள், கன்னிப்பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.

    Next Story
    ×