என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே 18-வது முறையாக அங்கன்வாடியை சூறையாடிய கரடி!
- 18-வது முறையாக கரடி உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட்களை நேற்று சூறையாடியது.
- பருப்பு எண்ணெய் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசி அங்கும், இங்கும் கொட்டி சென்றுள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி உட்பட்ட காந்திபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்தப் பகுதிக்கு நாள்தோறும் அவ்வப்போது கரடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருவதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இங்குள்ள அங்கன்வாடியை 18-வது முறையாக கரடி உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட்களை நேற்று சூறையாடியது. இதனால் மாணவ மாணவிகளும் செய்வதறியாமல் திகைத்துப் போய் உள்ளனர்.
பருப்பு எண்ணெய் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசி அங்கும், இங்கும் கொட்டி சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனத்துறையினர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்ட பின்னர் கரடியின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






