search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்- பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் பேச்சு
    X

    கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் பேசினார்.

    குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்- பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் பேச்சு

    • அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இரட்டை பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களி டையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் கீழ கோபுர வாசல் அருகில் குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    வித்யாதேவி சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்) :-

    எனது பகுதியில் உள்ள குளத்தில் படித்துறை அமைத்து தர வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக) :-

    எனது பகுதியில் மயான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். புதிதாக ரேஷன் கடையை கட்டி தர வேண்டும் என்றார்.

    சியாமளாதேவி (திமுக) :-

    கோடை காலமாக இருப்பதால் எனது வார்டு பகுதிகளில் கூடுதலாக குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    கென்னடி (திமுக):-

    வரும் காலம் கோடை காலமாக இருப்பதால் அனைத்து வாடுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    துணைத் தலைவர் :-

    2.0 திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் முகூர்த்த அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து தடை யை தவிர்க்கும் வகையில் மாற்றாக ஒரு வழிப்பாதை அமைப்பதற்கு இடம் வழங்கிய தருமபுரம் ஆதீனத்திற்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    தலைவர்:-

    உறுப்பின ர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப சரி செய்யப்படும்.

    குறிப்பாக குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் உடனுக்கு டன் நிறைவேற்றப்படும்.

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அரசிடம் கூடுதல் நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது இதற்கு மன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.

    Next Story
    ×