search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    எட்டயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    எட்டயபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், அதிகாரிகள் எட்டயபுரம் மேலவாசல், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.
    • அதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், கப் பறிமுதல் செய்யப்பட்டது.

    எட்டயபுரம்:

    சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ய அறிவுரை வழங்கியது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வழிகாட்டுதலின்படி எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் பூவையா, மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் எட்டயபுரம் மேலவாசல், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.

    அதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள், கப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உரிமையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    எட்டயபுரம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் மகேஸ்வரி மழைக்காலங்களில் நோய் பரவுவது குறித்தும், நோய் பரவாமல் தடுப்பது குறித்தும் எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×