என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை அருகே பாதாள வீரன் கோவிலில் பால்குட திருவிழா
    X

    பாதாள வீரன் கோவிலில் 108 பால்குடம் திருவிழா நடந்தது.

    மயிலாடுதுறை அருகே பாதாள வீரன் கோவிலில் பால்குட திருவிழா

    • சப்த கன்னிகள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது.
    • 108 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தில் பாதாள வீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை முன்னே செல்ல பச்சை காளி, பவளகாளி ஆட்டத்துடன் சக்திகரகம் முன்னே செல்ல 108 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    .இதனை தொடர்ந்துபாதாள வீரன் மற்றும் சப்த கன்னி சுவாமிகளுக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×