search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள்- செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
    X

    உலக மக்கள் தொகை தினத்தையொட்டி உதவி கலெக்டர் கோகுல் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்ட காட்சி. 

    உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள்- செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

    • கடந்த மாதம் 27 -ந்தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு பணிகளும், சேவைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
    • செவிலியர், மருத்துவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    1987 -ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 11 -ந்தேதியை உலக மக்கள் தொகை நாளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு விழிப்புணர்வு பணி

    இந்த வருடம் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்வோம், குடும்ப நல உறுதி மொழியினை ஏற்று வளம் பெறுவோம் என்ற கருப்பொருளை அடிப்படை யாகக் கொண்டு கடந்த மாதம் 27 -ந்தேதி முதல் பல்வேறு விழிப்புணர்வு பணிகளும், சேவைப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    வருகிற 24-ந் தேதி வரை இந்த விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    மாணவிகள்-செவிலியர்கள்

    இதில் கல்லூரி மாணவிகள், செவிலியர், மருத்துவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

    பேரணியை நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியை தொடர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சுகாதார துறையுடன் இணைந்து செயல்பட்டு வரும் விழிப்புணர்வு பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டது.

    Next Story
    ×