என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேடசந்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- வேடசந்தூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தீ விபத்து, நிலச்சரிவு, பூகம்பம் உள்ளிட்ட நேரங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விளக்கப்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தீ விபத்து, நிலச்சரிவு, பூகம்பம் உள்ளிட்ட நேரங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விளக்கினார். தீயணைப்பு வீரர்கள் மார்த்தாண்டன், ராஜகுமாரன், ஜோதிராமன் ஆகியோர் தீ தடுப்பு சாதனத்தை பயன்படுத்துவது குறித்து செய்து காட்டினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சாமியாத்தாள் , ஆசிரியர்கள் சடையாண்டி, பிளாரன்ஸ் சேவியர் மேரி, ரோஜா, வித்யாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். பேரிடர் மேலாண்மை மன்ற தலைவர் ஜெயமீனா அம்பிகை நன்றி கூறினார்.
Next Story