என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை தெற்கு பஜார் தூய சவேரியார் ஆலயத்தின் முன்பிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கிய போது எடுத்த படம்.
பாளையில் போதை ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
- போதையில்லா பாதை என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் நடைபெற்றது.
- 500-க்கும் மேற்பட்டோர் சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பாளை கத்தோலிக்க மறை மாவட்டம் தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக போதையில்லா பாதை என்ற தலைப்பில் இறைவன் இயற்கை இனிய நலம் தேடி என்ற சைக்கிள் பயணம் நடைபெற்றது. மறை மாவட்டத்தின் சவேரியார் பேராலயத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் சீவலப்பேரி வழியாக தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் வரை சென்றடைந்தது.
தவக்காலத்தில் நடைபெற்றுள்ள இந்த சிறப்பு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் புனித அந்தோணியார் திருத்தலத்தில் இறை வழிபாட்டுடன் முடி வடைந்தது.
விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை சைக்கிளில் பொருத்தியபடி கலந்து கொண்டனர்.






