என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் வகைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
    X

    பாரம்பரிய நெல் வகைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

    • நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
    • பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த கூடிய தொழில்நுட்பகள் குறித்து தெளிவாக விளக்கமளித்தார்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இயங்கிலரும் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்க ப்பட்ட கலைஞரின் ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் கிராமங்களிலிருந்து பாரம்பரியம் நெல் சாகுபடி குறித்த உள்மாவட்ட அளவிலான கண்டுணர்வு சுற்றுலா திருவையாறு வட்டாரம் கண்டியூர் கிராமம் விவசாயி தியாக ராஜான் நெல் வயலுக்கு 50 விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டன. இவர் 10 ஏக்கரில் பாரம்பரியம் நெல் சாகுபடி செய்து வருகிறார்.

    அங்கு அவர் கருப்பகவுனி, கருடன்சம்பா, கூப்பாலை. மாப்பிள்ளை சம்பா கருங்குறுவை, மரதுண்டி, கிச்சிலிசம்பா, சிவப்புகவனி, சம்பா ஆற்பாடு சிச்சடி, முற்றின சன்னம் ஆகிய ரகங்களையும் அதன் செயல்பாடுகள் மற்றம் மருத்துவகுணங்களையம் எடுத்துரைத்தார். விவசாயி களுக்கு உற்பத்தி செய்யும் பாரம்பரியம் நெல் ரகங்க ளை விதையாகவும் அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.

    நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் மற்றும் பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இதை தவிபதற்க்க நடவு செய்த 30 வது நாள் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர்களின் பக்க கிளைகள் அதிகரிக்கிறது. மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது இந்த பயிர் நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுகிறது.

    பாரம்பரியம் நெல் சாகுபடி செய்யும்பொழுது ஏற்ப்படகூடிய பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த கூடிய தொழில்நுட்பகயையும் மிக தெளிவாக விளாக்கம ளித்தார்.

    முடிவில் அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×