என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் லயனல் ராஜூக்கு விருது
- இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் 80-வது வருடாந்திர மாநாடு 5 நாட்கள் மும்பையில் நடந்தது.
- டாக்டர் டி.லயனல் ராஜூக்கு ‘சர்வதேச ஹீரோக்கள் விருது-2022’ வழங்கப்பட்டது.
நெல்லை:
மும்பையில் அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் 80-வது வருடாந்திர மாநாடு 5 நாட்கள் நடந்தது. இதில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் டி.லயனல் ராஜூக்கு 'சர்வதேச ஹீரோக்கள் விருது-2022' வழங்கப்பட்டது. மேலும் 'தி ஆன்ட்டி-மைக்ரோபியல் லேக்' என்ற அறிவியல் ரீதியான வீடியோ திரைப்படத்திற்காக, கருவிழி மற்றும் கண் மேற்புற நோய்கள் என்ற வகையினத்தின் கீழ் சிறந்த வீடியோவிற்கான விருதையும் அவர் வென்றார்.
கண்ணின் முன்புற பிரிவின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் அறுவை சிகிச்சை மருத்துவராக மருத்துவ சிகிச்சையில் இவரது அர்ப்பணிப்புமிக்க கடும் உழைப்பும், புதுமையான ஆராய்ச்சி அணுகுமுறைகளும், நோயாளிகளின் பார்வைத்திறன், சிகிச்சை விளைவுகள் மற்றும் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன. கண் சார்ந்த மற்றும் தொற்று நோய்கள் மீதான ஆராய்ச்சி துறையில் டாக்டர் லயனல்ராஜ் வழங்கியிருக்கும் பங்களிப்பை பாராட்டும் வகையில், அவருக்கு ஜான்சிபாரில் அமைந்துள்ள தேசிய சுகாதார நிறுவனம் கவுரவ பேராசிரியர் பட்டத்தை வழங்கியுள்ளது.