search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு விழா: கிராமப்புற வீரர்களை  மத்திய அரசு ஊக்குவிக்கிறது மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
    X

    ஊட்டியில் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு விழா: கிராமப்புற வீரர்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு

    • மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
    • சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பரலட்டி கிராமத்தில் நேதாஜி விளையாட்டு சங்கம் சாா்பில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

    இதில் மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல். முருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    மத்திய அரசு கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, மாவட்டம் மற்றும் கிராம அளவில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். இந்தத் திட்டத்தால் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பரலட்டி கிராமத்தைச் சோ்ந்த கிஷோா் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று இந்த கிராமம், மாவட்டம், நாட்டுக்கு பெருமை சோ்த்து உள்ளாா். இதே போல பிட் இந்தியா திட்டம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் அறிமுகப்படுத்தியது. இது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பேணிகாத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராமன், பாபு மற்றும் தும்மனட்டி, பரலட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம தலைவா்கள் உள்பட பலர் பங்கேற்றனா். முன்னதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு படுகா் சமுதாய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    Next Story
    ×