அவினாசி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அவினாசி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

அவினாசி:

அவினாசி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி, அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பிராக்கியாபாளையம், சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், மடத்துப்பாளையம், சேயூர் சாலை, வ.உ.சி. குடியிருப்பு, கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு ரதவீதிகள், அவினாசி கைக்காட்டி புதூர், சக்தி நகர், ராயம்பாளையம், எஸ்.பி. அப்பேரல் மற்றும் குமரன் காலனி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com