search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகத்திற்கு ஒத்துழைக்க கூடாது  பழனி கோவில் குறித்து  சமூக ஊடகங்களில் வெளியானஆடியோ
    X

    பழனி முருகன் கோவிலில் பழைய குளிர்சாதன கருவியின் பாகங்கள் அகற்றப்பட்ட காட்சி.

    கும்பாபிஷேகத்திற்கு ஒத்துழைக்க கூடாது பழனி கோவில் குறித்து சமூக ஊடகங்களில் வெளியானஆடியோ

    • பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    திண்டுக்கல்:

    பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழமையான சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு புதிய வண்ணங்கள்தீட்டும் பணி நடந்து வருகிறது.

    கோவில் உட்பகுதியில் சன்னதி மண்டபங்களில் பக்தர்கள் வசதிக்காக பொருத்தியிருந்த ராட்சத குளிர்சாதன பெட்டிகளுக்கு பதிலாக ரூ.25 லட்சம் மதிப்பில் நவீனகுளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

    இதற்காக கோவில் உட்பகுதியில் மூலவர் சன்னதி பகுதியில் இருந்து பழைய குளிர்சாதன பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகம் அவசரகதியில் நடத்தப்படுவதாகவும், இதற்கு கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    இதுபக்தர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தங்களுக்கு தெரியாது என தெரிவித்துவிட்டனர்.

    Next Story
    ×