search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

    • ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கிருஷ்ணகிரி,

    மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 25 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணமாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் முன்பணமாக வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஓசூரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498105529 மற்றும் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498175188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×