search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணையில் 20-ந் தேதி பலன்தரும் மரங்கள் ஏலம் - கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    ஈச்சங்கோட்டை கால்நடை பண்ணையில் 20-ந் தேதி பலன்தரும் மரங்கள் ஏலம் - கலெக்டர் தகவல்

    • ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகததில் ஏலம் நடைபெறுகிறது.
    • பனைமரங்கள், இலுப்பை மரங்கள், மா மரங்கள், முந்திரி மரங்கள் , இலவம் மரங்கள், புளிய மரங்கள், பலா மரங்கள், நெல்லி மரங்கள் ஏலமிடப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் பலன் தரும் மரங்களான காய்ப்பில் உள்ள 675 மரங்களின் மகசூலை அனுபவிக்கும் உரிமம் ஜூலை 2022 முதல் ஜூன் 2023 முடிய ஆண்டிற்கான பொது ஏலம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகததில் இந்த ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பனைமரங்கள் 100, இலுப்பை மரங்கள் 25, மா மரங்கள் 95, முந்திரி மரங்கள் 10 , இலவம் மரங்கள் 80, புளிய மரங்கள் 325, பலா மரங்கள் 7, நெல்லி மரங்கள் 5 ஏலமிடப்படுகிறது.

    ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக பொது ஏலம் நடத்தப்படும். ஒவ்வொரு வகை பலன்தரும் மரங்களும் தனித்தனியே ஏலமிடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவணித்தொகை ரூ.3 ஆயிரத்துக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்குப்பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு 4-1-2023 அன்று அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கார்டு அல்லது ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 19-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். 5 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.

    வங்கி வரைவோலையில் குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.

    ஒரு விண்ணப்பதாரின் பெயரில் உள்ள வரைவோலையை மற்றவரின் பெயரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட மாட்டாது. ஏலம் எடுத்தவர் ஏலம் கோரிய முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    செலுத்த தவறினால் அவரால் செலுத்தப்பட்ட டேவணித்தொகையை இழக்க நேரிடும்.

    தவிர்க்க இயலாத காரணத்தால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×