என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் முதியவர் மீது தாக்குதல்
- கிருஷ்ணன் தனது வீட்டுக்கு அருகே உள்ள குளத்துகரையில் பன்றிகள் வளர்த்து வருகிறார்.
- ஐகோர்ட் ராஜா, கிருஷ்ணனிடம் பன்றி வளர்க்கும் இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர், அரசன்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 83). இவர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்துகரையில் பன்றிகள் வளர்த்து வருகிறார். நாங்குநேரி தேரடி தெருவை சேர்ந்த ஐகோர்ட் ராஜா என்பவர் கிருஷ்ணனிடம் சென்று அவர் பன்றி வளர்க்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று கிருஷ்ணன் நாங்குநேரியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஐகோர்ட் ராஜா அவரிடம் பன்றி வளர்க்கும் இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஐகோர்ட் ராஜா, கிருஷ்ணனை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கிருஷ்ணன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக ஐகோர்ட் ராஜாவை தேடி வருகின்றனர்.






