என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான் கோட்டை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
    X

    அதியமான் கோட்டை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

    • அதியமான்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் 21.1.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    தருமபுரி,

    தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதியமான்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, இலளிகம், தோக்கம்பட்டி, கவுரி ஸ்பின்னிங் மில், ரெட்டிஅள்ளி, தேவரசம்பட்டி, எச்பிசிஎல், ஏலகிரி, நாகர்கூடல், பரிகம், சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், மானியத அள்ளி, தடங்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் 21.1.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×