search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூரில் ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கினர்
    X

    வடக்கு பூதலூர் ஆனந்த விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    பூதலூரில் ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கினர்

    • சரண கோஷங்களை முழக்கி விரதம் இருக்கும் ஐயப்ப மார்களுக்கு மாலை அணிவித்தனர்.
    • கடைபிடிக்க வேண்டிய மரபு சார்ந்த முறைகளை ஐயப்ப குருசாமிகள் விளக்கி கூறினார்.

    பூதலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சரண கோஷங்களை முழக்கி விரதம் அனுசரிக்க தொடங்குவது வழக்கம். அதை ஒட்டி இன்று காலை வடக்கு பூதலூர் ஆனந்த விநாயகர் ஆலயத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய குவிந்தனர்.

    ஸ்ரீ ஆனந்த விநாயகர் சன்னதியின் முன்னர் வாழை இலை விரிக்கப்பட்டு அதில் பொங்கல், அவல், பொட்டுக்கடலை, பூ,விபூதி, குங்குமம், வாழைப்பழம் வைக்கப்பட்டிருந்தது.

    ஐயப்ப குருசாமி தங்கமணி மற்றும் அப்பாராசு ஆகியோர் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைத்து சூடம் ஏற்றி சரண கோஷங்களை முழக்கி விரதம் இருக்கும் ஐயப்ப மார்களுக்கு மாலை அணிவித்தனர்.

    புதிதாக மாலை அணிய வந்திருந்தவர்களுக்கு மாலை அணிந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய மரபு சார்ந்த முறைகளை ஐயப்ப குருசாமிகள் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து மாலை அணிய வந்து கொண்டு இருந்த பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரத முறையீடுகளை எடுத்து கூறினார்.

    Next Story
    ×