என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடும்பம் நடத்த மனைவி வராததால்பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு
- கடந்த 7 வருடங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக ஜோதி கணவரை பிரித்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
- பூச்சி மருந்து குடித்து மணிகண்டன் மயங்கி விழுந்து கிடந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). இவரது மனைவி ஜோதி (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 7 வருடங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக ஜோதி கணவரை பிரித்து தனது தாய் வீடான ஜக்கசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.
குடும்பம் நடத்த வருமாறு அடிக்கடி ஜோதியை வீட்டிற்கு சென்று கணவர் அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
நேற்று மீண்டும் மணிகண்டன் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அங்கு அவர் மறுத்துள்ளதால் ஜக்கசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நட்தி வருகின்றனர்.