search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது
    X

    கலெக்டர் தீபக் ஜேக்கப்.

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் 3 நாட்கள் நடக்கிறது

    • இந்த முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
    • ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி இன்று சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த முகாம் நாளை (சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

    இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்ப தாரா்கள் மற்றும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×