தஞ்சையில், நாளை மாணவர்களுக்கான கலை போட்டிகள்- கலெக்டர் தகவல்

5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம்.
தஞ்சையில், நாளை மாணவர்களுக்கான கலை போட்டிகள்- கலெக்டர் தகவல்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் குரல் இசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும் , கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பரதநாட்டியம் , கிராமிய நடனம்,, குரல் இசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடக்கிறது.

இந்த போட்டிகள் 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

இதில் கலந்து கொள்ளும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் காலை 9 மணிக்கு வர வேண்டும். இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். பக்க வாத்தியங்களையோ, ஒலிநாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் ஐந்து நிமிடம் நடனம் ஆட அனுமதிக்கப்படும்.

குறலிசை போட்டியில் கர்நாடக இசை, தேசிய பாடல்கள் , சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவியப்போட்டி தொடங்கப்படும் போது ஒவ்வொரு வயதினருக்கும் தனித்தனியாக தலைப்புகள் அறிவிக்கப்படும். ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com