search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பகுதிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
    X

    அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பகுதிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

    • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து கூட்டம்பகுதிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
    • , 9384056231 என்ற எண்ணு க்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில்நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், பலவீனமான மரங்கள்,மரக்களைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ளஅடைப்புகளை அகற்றுதல், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களைஅடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்தல், பலவீனமான மின்கம்பங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவைகளை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீட்பு உபகரணங்களை திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருள்கள் இப்பருவமழை காலங்களில் 2 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றார். மேலும், பொதுமக்கள் பேரிடர் காலத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9384056231 என்ற எண்ணு க்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார். தொடர்ந்து, ஆட்சியர் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது மற்றும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்சி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×