என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையத்தில் இளம் பெண் மாயம்
- உடையார்பாளையத்தில் இளம் பெண் மாயமானார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பார்கவியை தேடி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் பார்கவி(வயது 18). இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பார்கவியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவரது தாய் கோமதி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பார்கவியை தேடி வருகின்றனர்.
Next Story






