search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிகிடக்கும் அரியலூர் நகராட்சி நூலகம் மீண்டும் திறக்கப்படுமா?
    X

    பூட்டிகிடக்கும் அரியலூர் நகராட்சி நூலகம் மீண்டும் திறக்கப்படுமா?

    • பூட்டிகிடக்கும் அரியலூர் நகராட்சி நூலகம் மீண்டும் திறக்கப்படுமா என வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்
    • அனைத்து தினசரி நாளிதழ்களும் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பதால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது

    அரியலூர்:

    அரியலூர் நகராட்சிக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர். அரசு மருத்துவகல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அரியலூர் நகராட்சி வெள்ளழத்தெருவில் நகராட்சி படிப்பகம் சுமார் 25ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. நூலகவரி, வீட்டுவசதி வரியுடன் வசூல் செய்யப்பட்டு வந்தது. நகராட்சி படிப்பகம் காலையும், மாலையும் திறந்து இருக்கும்.

    அனைத்து தினசரி நாளிதழ்களும் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பதால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது. கொரோனா காலத்தில் பொது மக்கள், வாசகர்கள் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு அனைத்து நூலகங்களையும் மூட உத்தரவிட்டது, கொரோனா பாதிப்புகள் சீரான நிலையில் மூடியிருந்த நூலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் அரியலூர் நகராட்சி நூலகம் திறக்கப்படவில்லை.எனவே நகராட்சி நூலகத்தை உடனடியாக திறந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சமூகஆர்வலர்கள், வாசகர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×