என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    அரியலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • அரியலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • 8,707 உறுப்பினர்களுக்கு ரூ.28.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினர்

    அரியலூர்:

    திருச்சியில் நடைபெற்ற விழாவில், மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 8,707 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, 617 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 8,707 உறுப்பினர்களுக்கு ரூ.28.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் திறன் பயிற்சி முடித்த 24 பேருக்கு இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கினார். இவ்விழாவுக்கு அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக திருச்சியில் நடைபெற்ற விழாவின் காணொலி காட்சிகள் நேரடியாக ஒளிப்பரப்பட்டன.


    Next Story
    ×