search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் விசிகவினர் சாலை மறியல்
    X

    ஜெயங்கொண்டத்தில் விசிகவினர் சாலை மறியல்

    • ஜெயங்கொண்டத்தில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசில் புகார் அனு கொடுத்தனர்

    அரியலூர்:

    தமிழகம் முழுவதும் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் முழுவதும் விசிகவினர் சுற்றுச்சுவர் மற்றும் பேனர், நோட்டீஸ் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி புறவழிச்சாலை மேம்பால சுற்றுச்சுவரில் திருமாவளவன் பிறந்த நாள் குறித்து விசிக வினர் விளம்பரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் அந்த விளம்பரத்தை யாரோ மர்ம நபர்கள் சிலர் சாணியை வாரி இறைத்து அதனை அழித்து அவமதிப்பு செய்துள்ளனர். இதனை அறிந்த விசிக - வினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர். பின்னர் விசிகவினர் இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

    Next Story
    ×