என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
    X

    வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

    • வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து உடையார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நாசர் (வயது 56). உடையார் பாளையத்தில் கோழிக்கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்து வந்த நாசர், சம்பவத்தன்று கடையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக அரியலூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவம னையில் சேர்க்கப்பட்ட நாசர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×