என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை
    X

    ஜெயங்கொண்டம் அருகே தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை

    • ஜெயங்கொண்டம் அருகே தந்தை பணம் தராததால் மகன் தற்கொலை செய்து கொணடார்
    • மனமுடைந்த அந்தோணி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே சவேரியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி(வயது40). இவரது மனைவி குளோரி கிளாரா(37). இவர்களுக்கு 8ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அந்தோணி அவரது சகோதரர் இருவருடைய தந்தை ஆரோக்கியசாமி வாய்மொழியாக பாகம் பிரித்து கொடுத்தார். இதை ஆரோக்கியசாமி அனுபவித்துவிட்டு சொத்தை விற்று செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணியும் அவரது மனைவி குளோரிகிளாராவும் சேர்ந்து ஆரோக்கிய சாமியிடம் டெஸ்ட் டியூப் பேபி மூலம் குழந்தை பெற பணம் கேட்டுள்ளனர்.

    இதற்கு அவர் பணம் தர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த அந்தோணி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தோணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. மாரியப்பன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    Next Story
    ×