என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
    X

    தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

    • தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
    • 10-ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ள மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டத்தை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பள்ளி உரிமையாளரின் உறவினரான தினேஷ் (வயது 37) கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஆசிரியர் தினேைஷ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    Next Story
    ×